Thursday, June 12, 2008

"காலச்சுவடு" இதழின் விமர்சனம்

மதுரையில் அ.மங்கை, வ.கீதா இணைந்து உருவாக்கியிருந்த 'காலக் கனவு' நாடகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. மதுரையில் நாடக நிகழ்விற்கு நண்பர் தேவேந்திரபூபதியின் 'கடவு' அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. அதில் ஒரு பாத்திரத்தை ஏற்றிருந்த பிரேமா ரேவதி என்னை அழைத்தது மதுரை செல்வதற்கான தூண்டுதலாக இருந்தது (பூபதி என்னை ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை!). சென்றதற்கான இன்னொரு காரணம் நண்பர் சுரேஷ் குமார இந்திரஜித் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் நிலையில் பார்த்து விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம். முன்னறிவிப்பு இல்லாமல் மதுரை விஜயம். முதல் தொலைபேசி அழைப்பு, நண்பர் படுக்கையில் இல்லை; அலுவலகம் மீண்டுவிட்டார் என்பதை அறியத்தந்தது. நண்பர் மீண்டுவிட்டதில் மகிழ்ச்சிதான் என்றாலும், கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. அன்று காலை நான் பங்கேற்கவேண்டிய ஒரு தனிப்பட்ட நாடகம் ரத்து செய்யப்பட்டுவிட்டது போல!

நவீன நாடகங்கள் பத்துப் பதினைந்து பார்த்திருப்பேன். 'காலக் கனவு' நிகழ்வை மிகுந்த ஈர்ப்புடன் பார்க்க முடிந்தது. எனக்குப் பலப்பல புதிய செய்திகள். 'கற்பாபிமானம்' என்ற பெரியாரின் தொடர் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவரது பெயர் சொல்லி இயங்கும் பல சமகாலப் பண்பாட்டுப் பழமைவாதிகளை விளங்கிக்கொள்ள அவரே ஒரு கருவியைத் தந்ததுபோல. பாரதிக்கு முன்னும் பின்னும் நகர்ந்து தமிழ்ப்பெண்ணின் விடுதலைக்கான குரல்களையும் செயல்பாடுகளையும் அந்நிகழ்வு அரங்கேற்றியது. அப்போராட்டத்தின் வரலாற்றை மீட்டுக்கொள்வது இந்நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்திருக்கலாம்.
பிரதியைத் தயாரித்திருந்த வ. கீதா தேசிய, திராவிட, இடதுசாரி இயக்கங்கள், கிறிஸ்தவம், இலக்கிய முயற்சிகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடுநிலையோடு தொகுத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது. அ. மங்கையின் இயக்கத்தில் நாடகம் தியேட்டருக்கான சாத்தியங்களைக்கொண்டிருந்ததா என்பது பற்றிய விவாதம் பின்னர் அறையில் எழுந்தது. ஒரு 'வாசிப்பு நிகழ்த்துதல்' என்ற அளவில் நல்ல முயற்சி என்பதே பொதுக் கருத்தாக இருந்தது. பங்கெடுத்த பெண்கள் எல்லோருமே நாடகப் பிரதியின் கருத்தியலோடு மனம் ஒன்றியவர்கள் என்பதால் நிகழ்த்துதல் இயல்பாகவும் உற்சாகமாகவும் இருந்ததுநாடகப் பிரதி நூலாக வரவேண்டியது அவசியம்

Review by "Indian Express"

A dream of four womenThursday October 18 2007 13:23 IST
Saranya Chakrapani

IT all began when Mangai and four young women- Revathi, Kalpana, Ponni and Kavinmalar came across this idea which instigated such passion in them that they decided to give life to it. When it finally happened, they called it Kalak Kanavu or ?A Dream of Time?.

The play Kalak Kanavu scripted in Tamil, draws some strong instances from the feminist history in Tamil Nadu that are either not known or have been forgotten.

Written by feminist, historian V.Geetha and directed by A. Mangai, who runs the feminist theatre initiative, Marappachi, this 75 minute docudrama throws light on moments from modern history that show women in public life or thinking of being part of something beyond family and domesticity.

It touches on the nationalist movement, the Devadasi debate, the coming of Christianity to Tamil Nadu and changes in women?s status, on unknown Muslim women?s voices and finally on the women in the self-respect movement.

'Every time we talk about Tamil culture, with instances like the controversy over actress Khushboo's remarks, it is popularly concluded that Chennai is conservative and so are its women. I wanted to inform people that rebellious women have always been a part of Tamilian culture and the notion that exists today is wrong.' says Mangai.

Actors Revathi, Kalpana, Ponni and Kavinmalar put forward a power packed performance, with perfection on details of history, dates and most importantly the role of music. The play revolves around those women who broke the clich鳠that surrounded womanhood and dared to explore beyond the four walls with aspects like education, marriage, family, art and politics.

It comprises excerpts from letters, diaries, speeches and writings of women who were keenly engaged with the world of politics and social change like Subhalakshmi, Ramamrudam, Muthulakshmi and Sundarambal to name some. It unfolds as a series of episodes that are thematically linked and which illuminate each other. It also emphasizes the role of Periyar and the turning point it created in the feminism battle.

The play was performed at the Queen Mary?s College on October 13, 2007.

புரட்சி பெரியார் முழக்கத்தின் விமர்சனம்


வரலாற்றுப் பெண்களை ஆவணமாக்கிய ‘காலக் கண்ணாடி’

புதைக்கப்பட்ட வரலாறுகளைத் தேடிப் பிடித்து புதிய தலைமுறையின் சிந்தனைக்கு ஆவணங்களாக முன் வைக்கும் புதுமையான நாடக முயற்சியில் ‘மரப்பாச்சி’ குழு வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நாடகத்தின் பெயர் ‘காலக் கண்ணாடி’. முழுதும் பெண்களே பங்கேற்று வரலாற்று ஆவணங்களை மட்டுமே கருத்தாடல்களாகக் கொண்டுள்ள, நாடகம் ஒன்றரை மணி நேரம் நிகழ்த்தப்பட்டபோதும் பார்வையாளர்களை உட்காரச் செய்வதில் நாடகத்தை நெறியாள்கை செய்துள்ள தோழர் மங்கை வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. நாடகத்தின் பனுவல் பெரியாரியல் ஆய்வாளர் வ.கீதா, தனது கடும் உழைப்பில் உருவாக்கியிருக்கிறார். பெண்ணியப் பார்வையில் விருப்பு வெறுப்பின்றி கருத்துகள் முன் வைக்கப்பட்டிருப்பது, இந்நாடகத்தின் சிறப்பு.

பாரதியோட புதுமைப் பெண்ணை ஒரு தொடக்கமா வச்சுக்கலாமே தவிர “பெண் விடுதலைக்கொரு புலவன் பாரதி என்று சொல்லி இனியும் வரலாற்றுக் கணக்கை அவ்வளவு எளிதாகத் தீர்த்து விட முடியாது” என்ற சரியான கருத்தாக்கத்தை முன் வைக்கிறது. பாரதி பாட்டும் சொல்லும் எடுபடாத சூழல்களிலும், பெண் கல்வியும் விடுதலையும் பேசப்பட்டது. அயோத்திதாசரோட ‘ஒரு பைசா தமிழனில்’ (அவர் நடத்திய பத்திரிகை) சாதி, பவுத்தம், தமிழ் ஆகிய மூன்று செய்திகளைப் பேசுகிறார். அதிலே எழுதிய சுவப்னேசுவரி என்ற பெண், ‘தமிழ் மாது’ என்கிற பத்திரிகையையும் நடத்தியிருக்கிறார். அந்த அம்மையார் பாரதியை அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.

19-ம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் - இந்து சமய பிற்போக்குத்தனங்களை விமர்சித்த கிறிஸ்தவர்கள் தங்களை முற்போக்கானவர்களாக உணர்ந்து அந்த உணர்வுக்கு ஏற்ப வாழவும் முற்பட்டனர்.

கிறிஸ்தவர்களின் தொண்டு

1778 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. தஞ்சையில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த, ஒரு பார்ப்பனப் பெண், கணவர் இறந்தவுடன், அவர் எரிக்கப்பட்ட நெருப்பில் வீழ்ந்து ‘உடன் கட்டை’ ஏற முயன்றார். அப்போது கிழக்கிந்திய கம்பெனியைச் சார்ந்த ராணுவ வீரன் ஒருவன், அந்தப் பெண்ணைக் காப்பாற்றி, தஞ்சையிலிருந்து நெல்லைக்குத் தூக்கிச் சென்றான். விதவையாகிப் போன அந்தப் பார்ப்பனப் பெண், நெல்லை பாளையங் கோட்டையில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, ‘கிளாரிண்டா’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தன்னைக் காப்பாற்றிய அந்த ராணுவ வீரருடன் காதல் வாழ்க்கை வாழ்கிறார். அப்போது - சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நின்றது, ஒரே ஒரு தோழி தான்.அந்த ராணுவ வீரனும் இறந்து போகிறான். அந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நின்றவர்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிச்சைமுத்து பாண்டியன் என்ற வண்ணார், நாகல நாய்க்கன் என்ற பறையர், ராயப்பன் என்ற பள்ளர், ஞானமுத்து என்ற ஈழவர், அச்சாயி என்ற பிச்சைக்காரப் பெண், பட்டி என்ற வடுகர் இனப் பெண். இவர்களை மய்யமாகக் கொண்ட அந்த சின்னஞ்சிறு சமூகத்தில் கிளாரிண்டா தஞ்சையிலிருந்து தான் கொண்டு வந்த செல்வத்தைக் கொண்டு ஏழை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் நிறுவி, கிறிஸ்தவ மதநெறிகளைப் பரப்பி, நாடார் இன மக்கள் - சாதி இழிவிலிருந்து விடுபட, முதன் முதல் மதம் மாறுவதற்குக் காரணமாக இருந்தார். கிறிஸ்தவம் வளர்த்த தன் மதிப்பை நாடார் இனப் பெண்களும் உணர்ந்தனர். அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘மார்சீலை’ (ரவிக்கை) அணிய நாடார் சமூகப் பெண்களுக்கு தடை செய்யப்பட்டிருந்ததை எதிர்த்து கிறிஸ்தவ மதம் தந்த சமத்துவ உணர்வில் போராடினர்.

இறுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானம் சாணார் பெண்கள் மார்புத் துணி அணிந்து கொள்ள உரிமை வழங்கியது. ஆனால், உயர்சாதிப் பெண்கள் உபயோகிக்கும் அதே மேலாடையைப் போல் பயன்படுத்தத் தடை விதித்தது. வெட்கம், தன்மானம் என்று மட்டும் இல்லாமல் எளிய மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதி பெண்களுக்கு கிறிஸ்தவம் அன்று புதிய சமூக அடையாளத்தை வழங்கியது.

தேவதாசிகளின் நிலை

கோயில்களுக்கு நேர்ந்து விட்டு பிறகு, தேவதாசிகளாக மாற்றப்பட்ட பெண்களை அந்த ‘அடிமை சிறையிலிருந்து’ கிறிஸ்தவ உபசேதிகள் மீட்டனர். ஊர் ஊராய் திரிந்து சேவை செய்த - இந்த கிறிஸ்தவ பெண் உபசேதிகள் மீது அன்று - ‘பிள்ளை பிடிப்பவர்கள்’ என்ற பழி சுமத்தப்பட்டது. இவர்களை ஏமிகார் மைக்கேல் என்ற வெள்ளை இன கிறிஸ்தவப் பெண் வழி நடத்தினார். அவர் ஒரு மதப்பிரசாரகர்.

அன்றைக்கு தேவதாசிகளின் அவல வாழ்க்கைக் குறித்து திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். ஒரு பெரும் நிலக்கிழாரின் வைப்பாட்டியாக, ஓர் இசை வேளாளப் பெண் இருந்தார். கருவுற்ற அந்தப் பெண், குழந்தை பெற்றார். குழந்தையை காவிரி ஆற்றில் எறியச் சொன்னார் அந்த நிலக்கிழார். அந்தப் பெண்ணோ, குழந்தையை ஓரிடத்தில் பத்திரமாக விட்டுவிட்டு, ஆற்றில் எறிந்து விட்டதாக பொய் சொன்னார். ஓர் இசைவேளாளப் பெண் தாசியாக இருக்க விரும்பாமல், மனம் திருந்தி, ஆசிரியையானதால் ஒரு மிராசுதாரர் அவரது அழகிய முகத்தைக் கீறி, அசிங்கப்படுத்தினார்.

அறிவொளி வீசும் முகத்துடன் திகழ்ந்த ஓர் இசை வேளாளர் பெண்ணைச் சந்தித்த திரு.வி.க. பள்ளியில் படிக்க விரும்புகிறாயா என்று கேட்டபோது, நான் நினைத்துக்கூட பார்க்க முடியாது; தலை போய் விடும் என்றாள் அந்தப் பெண். உன் தலையை வாங்குவோர் எவர் என்று கேட்டபோது, அருகிலிருந்த அவரின் தோழி - ஒரு ‘மடாதிபதியின்’ பெயரைச் சொன்னார். இதைக் கேட்ட திரு.வி.க. அதிர்ந்து போனதாக எழுதுகிறார்.

திராவிடர் இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்ட மூவலூர் ராமாமிர்தம் தேவதாசிகள் குலத்தில் பிறந்து தாசித் தொழிலில் இளம் வயதில் ஈடுபடுத்தப்பட்டு, பிறகு அதிலிருந்து வெளியே வந்து போராடினார். 15 வயது ராமாமிர்தத்தை 60 வயது ஆண், தனது வைப்பாட்டியாக்க முயலும்போது, அதிலிருந்து விடுபட்டு, தனக்கு சங்கீதம் பயிற்றுவித்தவரை, மணம் முடிக்கிறார். ஒரு தாசி திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதியை மீறியதற்காக ராமாமிர்தத்தை, ஒரு கொலை வழக்கில் வஞ்சகமாக சிக்க வைக்கிறார்கள். கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணைத் தேடி பிடித்து நேரில் நீதிமன்றத்தில் நிறுத்தி, ராமாமிர்தம் பொய் வழக்கிலிருந்து விடுதலை பெற்றார்.

தேவதாசி குலத்தில் பிறந்த முத்துலட்சுமி டாக்டருக்கு படித்து இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை சட்டமன்றத்தின் பெண் உறுப்பினரானார். அவர்தான் 1927 இல் தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தவர். தேவதாசிகளின் கோயில் பணிக்காக வழங்கப்பட்ட நிலத்தை, தேவதாசிகளுக்கு சொந்தமாக்க வேண்டும் என்று வாதிட்டார். (1928 நவம்பர் 6 ஆம் தேதி சென்னை சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதா சட்டமானது. பிறகு இந்து அறநிலையத்துறை சட்டத்தைத் திருத்தி - தேவதாசி தொழிலுக்காக வழங்கப்பட்ட கோயில் சொத்துக்களை தேவதாசிகளிடமே ஒப்படைக்க வலியுறுத்திப் போராடினார். தேவதாசிகள் மட்டும் கோயிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்காக கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட சொத்துக்கள் வழங்கப்படவில்லை - ஆர்.)

தாசிகளை தனிப்பட்ட முறையில் ஏசுவதைத் தவிர்த்து, அவர்களைப் பரத்தையராகவும், மனைவியரை பத்தினிகளாகவும் அடையாளப்படுத்திய அறவாய்ப் பாட்டை முதன் முதலில் விமர்சனப்படுத்தியவர் பெரியார் தான். தேவதாசி முறை ஒழியக் கூடாது என்று வாதிட்டவரிடம் பெரியார், அதை ஏன் ஒரு குறிப்பிட்ட ஒரு சமூகம் மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டும்? “தேசாபிமானமும் நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் முறைப்படி வரட்டும்” என்று பெரியார் கேட்டார். தேசபக்தியாளர்களை தேசாபிமானிகள் என்று கூறுவதுபோல கற்பு மீது பக்தி உள்ளவர்களுக்கு ‘கற்பாபிமானிகள் என்ற பெயரை பெரியார் சூட்டினார்.

தனது சங்கீத அறிவாலும், ஆற்றலாலும், வளர்ந்தவர் கே.பி.சுந்தராம்பாள் - அவரது பாடலுக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஆண் நடிகர்களும், ஆண் பாடகர்களும் திணறினர். அவர் தேவதாசி வகுப்பினரா என்பது தெரியாது. ஏற்கனவே திருமணமான பிரபல பார்ப்பன பாடகர் கிட்டப்பாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பார்ப்பன கிட்டப்பா தனது குடும்பத்தின் அழுத்தத்தால் சுந்தரம்பாளிடம் சுமூகமான வாழ்வைத் தொடரவில்லை. தனக்கு மனைவி என்ற அந்தஸ்து கிடைக்காமல் போன நிலையில் கே.பி. சுந்தரம்பாள் உள்ளம் உடைந்து நின்றார். கிட்டப்பா, மரணத்துக்குப் பிறகு துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

அன்றைக்கு காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட பல பெண்களில் கே.பி.சுந்தரம்பாளும் ஒருவரானார். தேசிய போராட்டத்தின் விளைவாக சைவம் - தனித்தமிழ் இயக்கங்களும் தோன்றின. மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார், 12 குழந்தைகளையும், கால்மாட்டில் ஒரு குந்தையையும் வைத்துக் கொண்டே படித்தார்; எழுதினார்.

சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்

தாம் சார்ந்திருந்த சமூகத்தையும், உலகத்தையும் விமர்சிக்கவும், மறுவரையறை செய்யவும், பண்பாட்டு வெளியையும், தளங்களையும் தேடிக் கொண்டிருந்த பல பெண்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் நாடிச் சென்றனர். அந்த அமைப்புகளை அவர்கள் சார்ந்து நின்றாலும், தமக்கென புதிய இலக்கணங்களை அவர்கள் வகுத்துக் கொண்டனர். சமதர்மத்தை கொள்கை நெறியாக முன் வைத்த சுயமரியாதை இயக்கம் இஸ்லாமிய சமூகத்தையும் ஏற்றுக் கொண்டது. இஸ்லாமிய மார்க்கம் - சமதர்ம அடையாளத்தைப் பெற வேண்டுமானால், ஏற்கப்பட வேண்டியவைகளை, இஸ்லாமியர் பலரே பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையில் கட்டுரைகளாக எழுதினர்.

வைதீகத் திருமணத்துக்கு மாற்றாக சுயமரியாதை திருமணத்தை அறிமுகம் செய்து ‘வாழ்க்கை ஒப்பந்தங்களை’ நடத்தியது சுயமரியாதை இயக்கம். சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தும், 70000 சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணத் தம்பதிகளின் படங்களோடு காலண்டரை வெளியிட்டது சுயமரியாதை இயக்கம்.

குஞ்சிதம், நீலாவதி, இந்திராணி, கண்ணம்மாள், அன்னபூரணி, ராமமிர்தம்மாள், மரகதவல்லி, ரெங்கநாயகி, விசாலாட்சி, பொன்னம்மாள், சுந்தரி, அஞ்சுகம், சிவகாமி, மேரி, மகாலட்சுமி, மஞ்சுளா பாய், வள்ளியம்மை, சுலோசனா, சிதம்பரம்மாள், மீனாட்சி, கிரிஜாதேவி, பினாங்கு ஜானகி, ஜெயசேகரி, ஆண்டாள் அம்மாள் என்று பல பெண்கள் சுயமரியாதை இயக்க மேடைப் பேச்சாளர்களாக திகழ்ந்தனர்.

இவ்வளவு முற்போக்காக இருந்த பொது வெளி எங்கே போச்சு? இந்த வரலாற்றுத் தொடர்ச்சி எப்படி அறுபட்டது? இந்த முறிவினால்தான் பெண் விடுதலை மட்டுமின்றி, பல பிரச்சினைகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கால வெளிப் பயணத்தின் சரடுகளை உணர்ந்து - இன்று செயல்படுவதே நம் முன் உள்ள சவால்.... கேள்விகளுக்கு முடிவில்லை என்ற கேள்வியோடு, இந்த ஆவண நாடகம் நிறைவடைகிறது.

தோழர்கள் கல்பனா, கவின் மலர், பொன்னி, ரேவதி, சரசுவதி, இவர்களோடு பார்வையாளர்களும் இணைந்து நிகழ்த்திய இந்த நாடகம் ஒரு எதிர்நீச்சல் முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஆவணங்களின் உள்ளடக்கம் உரையாடல்களாக வெளிப்படும்போது வார்த்தைகள் தவறாமல் - உரிய அழுத்தங்கள், பாவனைகளோடு வெளிப்படுத்துவதற்கு கடுமையான பயிற்சிகள் தேவை. ஒன்றரை மணி நேரத்தை கேளிக்கைகள் பக்கம் திருப்பிவிட்டு விடாமல் உள்ளத்தில் சுமைகளைப் படிப்படியாக இறங்கச் செய்து - ஏக்கம் - கவலைப் பெருமூச்சுக்கு உள்ளாக்கி விடுகிறது. காலக் கனவு, இந்த நாடகம் இளம் தோழர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகும். சென்னை, திருச்சி, மதுரை, சேலம், தஞ்சை நகரங்களில் நிகழ்த்தப்பட்டு, பேராதரவைப் பெற்று வருகிறது, இந்த நாடகம்.

Review by "The Hindu"

Of a fragmented past
Marappachi’s docu-drama unveils the struggles for women’s participation in public sphere, writes D.KARTHIKEYAN

Photo: G. Moorthy Perfect depiction Shedding conventional practices

“Power often operates in unseen ways through institutions and cultural symbols becoming so routinized that the distribution of benefits and costs (winners and losers) in these transactions are relatively invisible”— Michel Foucault, French Philosopher and Historian
In an effort to socially and historically construct women’s participation in the public sphere and the feminist movement’s engagement with the past, a docu-drama was performed by “Marappachi”, a Chennai based theatre group.

Staged in Temple City under the auspices of ‘Koodu’ a women reader’s forum and ‘Kadavu’ a literary organization, the play titled Kalak Kanavu or ‘A Dream of Time’, was written by social historian V.Geetha and directed by A. Mangai, pseudonym of Padma Venkataraman, a Professor of Literature in Stella Maris College who runs the feminist theatre Marappachi. Struggles of women

The play revolved around events from 19th Century in erstwhile Madras Presidency, when women began questioning their marginality. The play is like an event or a reading that depicts the various struggles of women. The docu-drama throws light on moments from modern history that shows women’s engagement in the public sphere beyond their domestic confines.

The performance rejected conventional theatrical practices where the meaning is primarily derived from the actor’s narration and not from the incorporation of external theatrical components such as sets, costumes, lights or any other technological intrusion.

Actors Kavinmalar, Revathi, Kalpana, Ponni did a good job with clear rendition of songs. Taking cue from the Subaltern Studies historiography’s search for hidden pasts, the narrative with its non-linearity was strong with excerpts from letters, diaries, speeches, oral testimonies and writings of women. It was well supported by a visual representation of posters acquired from the Rojah Muthiah Library. Hidden histories

The play was all about fragmented histories of the feminist movement, which was not structural in form. Through a non-linear narrative the play touched upon the influence of various movements and personalities on the women. For instance, the play discussed the influence of Gandhi when a lot of women participated in Satyagraha.

It also depicted how Nadars — earlier called Shanars — and lower caste women in Palayamkottai embraced Christianity to escape from the travails of Hinduism, like the practice of preventing lower caste women from wearing ‘breast cloth’.

How people reacted to the change of dress code for women under the influence of Christianity was performed in a highly satirical but enjoyable way.

A devadasi of the early 20th Century, Moovallur Ramamritham Ammaiyar, from the Isai Vellala Community who broke away from the devadasi system to take up the fight for women’s rights within the Dravidian Movement was depicted well. The novel authored by her in 1936, deals with the lives of devadasis. It came during a raging debate over the devadasi system when she chose to marry a man of her choice, a musician. She was punished and ostracised by her caste and community.

It was mostly the Devadasi women who entered the Tamil film industry. K.B.Sundarambal was one of them who married a Brahmin Kittappa and identified herself so much with him that in the process she lost her ‘self’.

Periyar’s influence on women’s movement was equally impressive. The women Self –Respecters became active historical agents making and re-making their every day lives and creating history which is known widely.

The beating of Parai can be taken as an instance of trying to appropriate the symbols of “other” and construct a history of false consciousness. The kind of embodied dispositions that acquire an exchange value are not equally distributed socially, but fractured by caste, class, and gendered positions or locations.

It is overt that the actors playing solicitors were recruited not principally on the basis of acting skill but on their embodied attributes as middle class women. The casting was done consciously on the basis of theoretical understanding rather than empiricism. This disparity between portrayal and reality and the illogical limitation of access for Subaltern women performers is a telling time lag, which highlights the point that it is the interaction between ideologies and material circumstances that ‘makes any system so powerful and enduring’.

The question of subalternity is palpably missing here, not only with reference to the verbal and corporeal imagery represented on stage but also to the power relations and levels of agency which informed the theatre act.

Initially the play gives a feeling whether it’s a hagiography of Bharathiar as lot of references are made to his feminist ideas. But then all of a sudden, reference is also made where he terms “Paarpanai Iyer endra Kaalamum poche” One wonders the relevance of these lines and the need to bring in caste here.

A reference was made on Ayothee Thass Pandithar and his ‘Oru Paisa Thamizhan’ and Sapneswari Ammal as part of the hidden histories, which was before the advent of Bharathiar.
The meaning of such socially constructed representations depends on who is in charge of the cultural production and which audiences are interpreting the cultural performances.

The link between theatre and the society it belongs to, no longer appears either the only one or the most justifiable one for someone who wishes to interrogate theatre and its culture.

சந்திப்பு வலைத்தளத்தின் விமர்சனம்

வ. கீதாவின் சிந்தனையில் உருவான 'காலக் கனவு' இன்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கில் திரளான மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது. நாடகத்துறையில் புது முயற்சிகள் இதில் கையாளப்பட்டுள்ளது. வரலாறு புத்தகமாகவும். நாவலாகவும். திரைப்படமாகவும். கவிதையாகவும். டாக்குமென்டரியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரலாறு நாடகமாக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழக பெண்ணுரிமை வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.பெண்ணடிமைத்தனம் நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்போடு இணைந்தது. இந்தியாவில் இன்றைக்கும் அரை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு தகர்க்கப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூக அமைப்பில் மிகவும் கீழாக ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட பெண்களை மிகவும் கீழானவர்களாகத்தான் நம் இந்திய சமூகம் சித்தரித்துள்ளது.இத்தகைய சமூக அமைப்பில் பெண்களுக்கு இடப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய தமிழகத்தில் எழுந்த பல்வேறு போக்குகளை இந்நாடகம் மிகவும் அற்புதமாக படம் பிடித்துள்ளது.குறிப்பாக 120 ஆண்டு கால வரலாறு இதில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தேவதாசி முறை தொடங்கி பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது முதல். குழந்தை மணம். விதவை மறுமணம். உடன்கட்டை ஏறுதல். போன்ற பல்வேறு சமூக விசயங்களை ஆழமாக உள்ளடக்கி இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த அவல நிலைக்கு எதிராக போராடிய சுப்புலட்சுமி அம்மையார். மூவலுர் ராமமிர்தம்மாள். மணலுர் மணியம்மையார். ஜனாகியம்மாள். அயோத்திதாச பண்டிதர். பெரியார். மகாகவி பாரதியார்.... என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக எவ்வாறு குரல் எழுப்பினார்கள் என்பதை மிக அழகாக வடிவமைத்துள்ளனர்.நாடகம் கதை சொல்லும் பாணியை கையாண்டிருந்தாலும். அதனை மிகவும் நுட்பமாக பாடலுடனும். அட்டைப் படங்களைக் கொண்டும். தங்கது துடிப்பான நடிப்பின; மூலமும் கண்முண் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.குறிப்பபாக இதில் பெரும் பகுதி கையாண்டிருக்கும் மூல வசனங்கள் நெத்தியடியாக உள்ளது. தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக பிற்போக்கு பழமைவாதிகள் குரல் எழுப்பி வரும் வேளையில் தமிழகத்தில் சித்தி ஜிபைதா போகம் போன்ற இசுலாமிய பெண்மணிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்திருப்பது புதிய தகவலாக இருக்கிறது.கதாபாத்திரங்களாக பேசும் ரேவதி. கவின். கப்னா. பொன்னி மற்றும் துணை பாத்திரங்கள் அனைவரும் மிசச் சிறப்பாக தங்களது பாத்திரத்தை நிறைவேற்றுகின்றனர்.குறிப்பாக கவினின் குரல் இனிமையாக காற்றை கிழித்துக் கொண்டு கீதம் இசைக்கிறது. அதேபோல் பொன்னியின் குரல் கம்பீரமாக - கலகத்தின் குரலாக ஒலிக்கிறது.கடந்த காலத்தை சிறப்போடு படம் டிபத்தவர்கள் நிகழ்காலத்தையும் கொஞ்சம் சித்தரித்திருக்கலாம். 40-60களில் திராவிட இயக்கம் பெண்ணுரிமை விசயத்தில் தாக்கத்தை உண்டாக்கியிருந்தாலும். அது தமிழகத்தில் தற்போது எந்த வடிவத்தில் உள்ளது என்பதை பரிசீலனைக்குரியதே!அதே சமயம் இன்றைக்கு பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விசயத்தில் சமூகத்திலும். அரசியலிலும். ஆரோக்கியமாக ஈடுபட வைத்திருப்பது இடதுசாரிகளே என்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது.மேலும் பெண்ணியம் என்ற தளம் தனித்து இயங்குவது சமூகத்தின் அடித்தளத்தை மாற்றுவதற்கு எந்த வகையிலான பாத்திரத்தை வகிக்கிறது. பெண்ணடிமைத்தனம் என்பது நிலவும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை மாற்றுவதோடு இணைக்கப்பட வேண்டும். நாடக ஒருங்கிணைப்பாளர்கள் இதனை கணக்கில் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

"தீக்கதிர்" நாளிதழின் விமர்சனம்

வரலாறு எத்தனையோ அடக்குமுறைகளைத் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. அவற்றில் மிக மோசமான அடக்குமுறை பெண்களை ஆணுக்கு சுகமும் சோறும் தருகிற எந்திரங்களாக ஆக்கியதுதான். இதன் இன்னொரு பக்கமாக, பெண்களின் வரலாற்றுப் பங்களிப்பும் அடக்கப் பட்டது. வரலாற்று நாயகன்கள் மட்டுமே போற்றப்படுகிறார்கள். நாயகிகள் போற்றப்படுவதில்லை.வரலாறு, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சிகளை யும் தன்னுள் பதிந்து வந்திருக்கிறது. பெண்ணுரிமை இயக் கம் அப்படிப்பட்ட எழுச்சி வரலாறுதான். மறைக்கப்பட்ட அல்லது பெரிதும் நினைவுகூரப்படாத அந்த வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்கிறது, ‘மரப்பாச்சி’ குழுவி னரின் புதிய “காலக்கனவு” ஆவண நாடகம். “பெண்ணிய நோக்கில் நமது நவீன கால வரலாற்றை ஆராயும் ஒரு முயற்சி. முக்கியமான வரலாற்றுத் தருணங்களையும் நிகழ்வு களையும் பெண்கள் எவ்வாறு உணர்ந்தார்கள், அத்தகைய உணர்தலானது அவர்களை எவ்விதத்தில் பாதித்தது என் பதை அவர்களின் வார்த்தைகளினூடாக அரங்கேற்றும் ஒரு நிகழ்வு இது,” என்று அறிமுகக் குறிப்பில் கூறப்பட்டிருக் கிறது. பெண்விடுதலைச் சிந்தனைகள் பளிச்செனத் தெரி யும் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான வரலாற்றுச் சங்கிலியின் கண்ணிகள் இதில் கோர்க்கப்பட்டுள்ளன.பாரதிக்கும் முன்பே, பெண்விடுதலைக் குரல் பெண் களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டதைக் கூறுவதிலி ருந்து நாடகம் தொடங்குகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மேல்சாதிப் பெண்களைப் போல் ஆடை அணிவதற்காக நடத்திய போராட்டம், ஒதுக்கப்பட்ட பெண் களுக்கு கிறி°துவம் தந்த தன்னம்பிக்கை, தேவதாசி முறையிலிருந்து பெண்கள் மீட்கப்பட்டது... என அன்றைய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. பெண்ணின் சுய அடையாளத்திற்காக எழுந்து நின்ற மூதலூர் ராமாமிருதம் வெளிப்படுத்திய துணிச்சலான கருத்துக்கள், பெண் கல்விக்காகப் போராடிய முத்துலட்சுமி, இஸ்லாமிய மதத்திற் குள் பெண்ணின் இடத்திற்காக எழுதிய சித்தி ஜூனைதா பேகம் என்று பலப்பல தகவல்கள் வருகின்றன. பெரியாரின் இயக்கம் தொடங்கியதும் இந்தப் பெண்களுக்கு ஒரு வலுவான தளம் கிடைக்கிறது. “வைதீகமாக இருந்த திருமணத்தை சமுக ஒப்பந்தமாக்கியது சுயமரியாதை இயக்கம்,” என்ற கருத்து பதிவு செய்யப்படுகிறது.“வரலாற்றின் தொடர்ச்சி எப்படி அறுபட்டது,” என கேள்வி எழுப்பும் இந்த நாடகம், அறுபட்ட அத்தியாயங்களை தேடிப்படிக்கத் தூண்டுவதில் பெரும் வெற்றி பெறு கிறது. பெண்ணடிமைத் தனத்தை ஏதோ ஒரு வகையில் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மனசாட்சி யில் காத்திரமான உறுத்தலை ஏற்படுத்துகிறது. இதை மாற்றியே தீர்வது என்று களம் இறங்குவோர் நெஞ்சங்களில் மகத்தான மரபு பற்றிய பெருமிதத்தையும், அதன் தொடர்ச்சி பற்றிய நம்பிக்கையையும் விதைக்கிறது.“இடதுசாரி செயல்பாடுகளும், சுயமரியாதை இயக்கமும் பெண்களுக்கு உருவாக்கியளித்த வெளிகள், வாய்ப்பு கள்...” என அறிமுகத்தின்போது சொல்லப்படுகிறது. ஆனால், இடதுசாரி சிந்தனைகளோடு தங்களைப் பிணைத் துக் கொண்ட பெண் போராளிகள் பற்றி மேலோட்டமாக, அவர்களது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் நாடக நடிகர் விஸ்வநாத தாஸ் மற்ற நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டபோது, ஊருக்கு அஞ்சாமல் அவரோடு சேர்ந்து மேடை ஏறி நடித்த கே.பி.ஜானகி அம்மாள் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் கூடவா சொல்வதற்குக் கிடைக்கவில்லை? சிறையில் அடைக்கப்பட்ட லட்சுமி அம்மாள் தன் மகளின் முகத்தை கூட காண முடியாதவராக செத்துப்போய், புதைத்தார்களா, எரித்தார்களா என்பது கூட தெரியாமல் உடல் மறைக்கப்பட்டதே - அவரது போராட்டத்திலிருந்து சின்னக் குறிப்பு கூடவா கூறமுடியவில்லை?“இடதுசாரிகள் இதில் பெரிய அளவுக்கு எதுவும் செய்துவிட வில்லை,” என்று ஒரு விமர்சனம் வேறு போகிற போக்கில் வீசப்படுகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும், சுதந்திர இந்தியாவின் தொடக்கக் கட்டத்திலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் நிலவியது. வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படையான போராட்டத்தைக் கையில் எடுத்ததால் ஆளும் வர்க்கம் உருவாக்கிய நிலைமை அது. அந்தச் சூழலில், நாடகத்தில் குறிப்பிடப்படும் மற்ற பெண்களைப் போல் இடதுசாரி இயக்கத்தினரின் குரல் ஓங்கி ஒலிக்க முடியாமல் இருந்தது. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பாலின வேறுபாடின்றி தோழர்களின் கருத்துக்கள் இயக்கத்தின் நிலைபாடாகவே வெளிப்படு கின்றன. தனி நபர் சிந்தனையாக அடையாளம் பெறுவ தில்லை. அவ்வகையில் கம்யூனிஸ்ட் பெண்களின் வார்த்தைகள் இயக்கத்தின் குரலாக ஒலித்தே வந்துள்ளன. இன்று வரையில் சாதிக்க முடிந்துள்ள பெண்களின் உரிமை சார்ந்த சட்டங்களும் திட்டங்களும் இல்லாமல் வந்துவிட வில்லை. இந்த இயக்கமுறையைப் புரிந்து கொள்ளாமல் இடதுசாரிகள் பெரிதாக எதுவும் செய்துவிட வில்லை என்று எளிதாகத் தூக்கி எறிவது சில அறிவு ஜீவிகளுக்கு எளிதாகக் இருக்கிறது.ஆயினும் இடதுசாரி இயக்கப் பெண்கள் பற்றி கவிஞர் இன்குலாப் வழங்கியுள்ள பாடல் கம்பீரமாய்க் காற்றில் பரவு கிறது.நாடக வடிவம் குறிப்பிட வேண்டிய ஒன்று. துவக்கம், உச்சம், முடிவு என்ற கதை வடிவத்தில் அல்லாமல், நாட் குறிப்புகள், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்றவற்றி லிருந்து எடுத்த தகவல்களை நயம் கலந்து வழங்கியிருக் கிறார் வ.கீதா.மேடை நிகழ்வாகவும் இல்லாமல், வட்டக் களமாகவும் இல்லாமல், தரையில் மையத்திலிருந்து மூன்று திசைகளுக்கு விரிக்கப்பட்டிருக்கும் நீளமான மூன்று பாய்கள்தான் நடிப்புக் களம்! அந்தப் பாய்களில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே நடிப்பாளர்கள் தகவல்களைப் பரிமாறியது முற்றிலும் புதிய அனுபவம். சில தகவல்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக அரங்கச் சுவர்களில் அவ்வப்போது நடிப்பாளர்கள் தொங்கவிட்டது ஒரு வரலாற்று வகுப்பறை உணர்வை ஏற்படுத்தியது.பாய்களின் இடைவெளியில் பார்வையாளர்கள் அமர முடிகிறது. நாடகத்தின் செய்தி அவர்களோடு நெருக்கமாக இணைவதை உறுதிப் படுத்துகிறது பேராசிரியர் மங்கையின் நெறியாள்கை.பொன்னி, கல்பனா, ரேவதி, கவின்மலர் ஆகிய நான்கே பேர்தான் நடிப்பாளர்கள். சரியான குரல் பயிற்சியுடன், தேவையான உடல் மொழியுடன் அவர்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தை உருவகப்படுத்துகிறார்கள். ஆங்காங்கே பார்வையாளர்களின் பங்கேற்புக்கும் வழியமைக்கப்பட்டிருக் கிறது.முழுமையான பாலின சமத்துவம் என்ற கனவு நன வாகிற காலம் வரும். பெண்ணியக் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி, சமுதாயக் கண்ணோட்டத்திலும் அதனை நிறைவேற்றப் புறப்பட்டவர்களுக்குத் தோள்தரும் படைப்புகளில் ஒன்றாக இதனை வழங்கியிருக்கிற இவர்கள் வர லாற்றின் வாழ்த்துக்குரியவர்கள்.-அ. குமரேசன்